இலங்கையில் இந்த மாதத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போது பெய்து வரும் மழையுடனான வானிலையால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இம்மாதம் மாத்திரம் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 3,200 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இவர்களில் அதிக நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.
கொழும்பு, களுத்துறை, கல்முனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதத்தில் 5,416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இந்த வருடத்தில் இதுவரை 71,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.