கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தை ஏற்படுத்திய காரில் பயணித்த பெண்ணை மற்றொரு பெண் தாக்கிய நிலையில் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த பெண்ணை பொலிஸார் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்தில் 24 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.