நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களால் நடத்தப்படும் கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் முழு சமூகத்திற்கும் சுமையாக மாறியுள்ளது.
இந்த பேரழிவை அடக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட நபர்களின் நிலை என்னவாக இருந்தாலும் அவர்களை கைது செய்யுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பிரபல தமிழ் வர்த்தகர் ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாஃப்டரின் கொலைச் சம்பவம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான பொலிஸ் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான விசாரணைகளில் தொடர்புடைய சிரேஷ்ட அதிகாரிகாரிகளுடனான கலந்துரையாடலின்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.



















