நியூயோர்க்கில் இலங்கையில் வடபகுதி யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழரின் தோசைக்கடை அந்நாட்டு மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தோசைகடை ஆரம்பிக்கப்பட்டு 18 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றதாக கூறப்படுகின்றமை பலருக்கும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க் என்றால் இரட்டைக் கோபுரங்கள் தான் நினைவிற்கு வரும் ஆனால் அங்கு இலங்கை தமிழரான திருக்குமார் கந்தசாமியின் தோசைக்கடையும் மிகவும் பிரபல்யம்.
40க்கும் மேற்பட்ட தோசை வகை
நியூயோர்க் இரட்டைக் கோபுரம் அருகே கிறிஸ்டோபர் தெருவில் தான் திருக்குமார் கந்தசாமியின் தோசை கடை உள்ளது. இவரின் கடையில் விதம் விதமான தோசைகள் கிடைக்குமாம்.
அதன்படி 40க்கும் மேற்பட்ட தோசை வகைகளை ருசிப்பார்க்க வைக்கிறார். பல்வேறு தோசைக்கு தேவையான எல்லா பொருள்களையும், சட்னி, சாம்பார், இட்லி பொடி என அனைத்தையும் வீட்டில் இவரே தயாரித்து எடுத்துவருவதால் சுவையும் ருசியும் மிகவும் சூப்பராக இருக்கமாம்.
சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமென்பதால்இவருக்கு எல்லா நாடுகளிலிருந்தும் பாராட்டுகள் வந்துக் கொண்டே இருக்குமாம்.
அதுமட்டுமல்லாது திருக்குமார் கந்தசாமியின் தோசைக்கடை கடை குறித்த விவரங்கள் 42 புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன.
2007ஆம் ஆண்டில்விருது
அதேசமயம் 2007ஆம் ஆண்டில், சிறந்த தெரு உணவு விற்பனையாளருக்கான நியூயோர்க்கின் வருடாந்திரப் போட்டியான வெண்டி விருதை கந்தசாமி வென்றுள்ளார்.
உலகின் பல நாட்டு மக்களும் வசிக்கும் நியூயோர்க்கில் அமெரிக்கன், மெக்ஸிகன், ஐரோப்பியன், ஆப்கன் ஸ்ட்ரீட் ஃபுட்களுக்கு மத்தியில் நம் ஊர் தோசையையும் போட்டிபோடவைத்துள்ளார் திருக்குமார் கந்தசாமி.
திருக்குமார் கந்தசாமியின் கடையில் தோசை விலை 7 டாலர்கள் . அமெரிக்காவில் பர்கர் விலை இதைவிட அதிகமாக உள்ள நிலையில் திருக்குமாரின் கடைக்கு அதிகளவான அமெரிக்கர்களும் தோடையை ருசிபார்க்க வருகின்றார்கள்.
அதேவேளை புலம் பெயர் நாடுகளில் பலரும் எமது ஊர் உணவுகளை விரும்பி தேடிதேடி உண்ணும் நிலையில், திருக்குமார் கந்தசாமியின் தோசையானது உள்ளூர் வாசிகளை மட்டுமல்லாது வெளிநாட்டவர்களையும் ஈர்த்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.