இலங்கையில் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்பதற்காக பிரான்ஸ் முழுமையான ஆதரவை நல்கியுள்ளது.
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜின் பிரன்கொயிஸ் பெக்டட் ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை சந்தித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிதி பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள சவால்கள் மற்றும் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்புகளுக்கு மத்தியில் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டது.
சர்வதேச நாணய நிதிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பல்தரப்பு மற்றும் இருதரப்பு பங்குதாரர்களிமிருந்து எதிர்பார்க்கும் உதவி குறித்தும் அங்கு கலந்துரையாடப்பட்டது.
அடுத்த மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என ராஜாங்க அமைச்சர் அங்கு குறிப்பிட்டார்.
Had an extensive discussion with the French Ambassador to Sri Lanka HE Jean Francois Pactet. Exchanged views on the progress of the IMF programme and stabilization of LKA’s economy. Fullest support was assured to recover and restore the stability of the economy. pic.twitter.com/b55b0sEM3K
— Shehan Semasinghe (@ShehanSema) December 19, 2022