இலங்கையில் வெற்றிகரமாக குடும்ப வாழ்க்கையை நடத்துவது தொடர்பாக தொலைக்காட்சி வழியாக ஆலோசனைகளை வழங்கும் பல்கலைக்கழக விரிவுரையாளரான பௌத்த பிக்கு ஒருவரால் சர்ச்சை நிலைமை தோன்றியுள்ளது.
குறித்த பிக்கு தனது மனைவியுடன் தவறான தொடர்பை வைத்திருப்பதாக குற்றம் சுமத்தி, கணவர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பௌத்த பிக்கு தலைமையில் இயங்கும் விகாரையின் அறங்காவலர் சபை உறுப்பினர் ஒருவரே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளர்.
இதனடிப்படையில் வழக்குடன் சம்பந்தப்பட்ட காணொளி சாட்சியத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரான ஏத்கந்துரே சுமணசார தேரருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன் பிக்கு இரண்டரை கோடி ரூபாவை இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
தனது மனைவியை இரண்டு வீடுகளில் தங்க வைத்து, பௌத்த பிக்கு மேற்கொண்டு வரும் வாழ்க்கை சம்பந்தப்பட்ட காணொளிகளை மனுதார், நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.