நத்தார் பண்டிகையை முன்னிட்டு எட்டு விசேட ரயில்கள் சேவை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விசேட ரயில்கள் சேவை ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சேவை
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையும் பதுளையிலிருந்து கோட்டை வரையும் மூன்று விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளன.
கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கும் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.