வெளிநாடு செல்வதற்காக கொழும்பில் தங்கி இருந்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான கணேஷ் துஜீவன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இறப்பில் மர்மம்
இந்நிலையில் இளைஞனின் இறப்பில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் இளைஞர் உயிரிழந்த தொடர்ப்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.