கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் விடுமுறையை கழிப்பதற்காக ஜமெய்க்கா விஜயம் செய்கின்றார்.
ஜமெய்க்காவில் ஒரு வார காலம் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தனிப்பட்ட விஜயத்தின் போதும் பிரதமர் தொலைவிலிருந்து தனது பணிகளை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறையை கழிப்பதற்காக செல்லும் பயணத்தில் ஏதேனும் விதி மீறல்களில் ஈடுபடவில்லை என்பதனை உறுதி செய்து கொள்ள பிரதமர், சமஷ்டி ஒழுக்கவிதி அலுவலகத்திடம் ஆலோசனை பெற்றுக் கொண்டுள்ளார்.
கடந்த 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் பஹமாஸ் தீவுகளுக்கு விடுமுறையை கழிப்பதற்காக விஜயம் செய்த போது ஒழுக்க விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விஜயம் என்றாலும் பிரதமர் றோயல் கனேடியன் எயார் போஸ் விமானத்தில் பயணம் செய்ய வேண்டியது கட்டாயமானதாகும்.
பாதுகாப்பு நோக்கங்களுக்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகின்றது.