மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், திரு. சீறிகாந்தா,பிரேமசந்திரன், மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் வந்திருந்தனர்.
ஏற்கனவே நாங்கள் எல்லோரும் சேர்ந்து சில பொதுவான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒருமித்து தமிழ்மக்கள் சார்பிலே சில கடிதங்களை எழுதி உள்ளோம்.ஜக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்திற்கு .
அதே மாதிரி தொடர்ந்து நாங்கள் அரசாங்கத்தோடு செயற்படுகின்ற விடயங்கள் சம்பந்தமாகவும்,நாங்கள் தொடர்ந்து எங்களுடைய கருத்துக்களை இவ்வாறு சொல்ல வேண்டும் என்பது சம்பந்தமாகவும், தேர்தல் வந்தால் எந்த விதத்திலே நாங்கள் சேர்ந்து மக்களுக்கு நன்மை தரக்கூடிய விதத்தில் சேர்ந்து செயலாற்றலாம் என்பது சம்பந்தமாகவும் நாங்கள் பேசிக் கொண்டு இருக்கின்றோம்.
தேர்தலில் என்ன என்ன பிரச்சினைகள் வரும் தற்சமயம் இருக்கின்ற தேர்தல் முறையில் இருக்கின்ற 60,40 என்று இருப்பதில் எவ்வாறான பிரச்சினைகளை நாம் எதிர்நோக்க வேண்டி இருக்கும் என இப்படி பல விதமான விடயங்கள் பேசி கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சுமந்திரன் வந்து தானாகவே ஜனாதிபதியிடம் 5 கட்சிகளும் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.அதற்கு ஜனாதிபதி நாளைக்கு பின்னேரம் வாருங்கள் என்று கூறியிருந்தார். அவர் எங்களுக்கு சொல்லி இருந்தார் என்று விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நான் அதற்கு பதில் அளித்தேன் தற்பொழுது யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளேன்.மீண்டும் என்னால் அங்கு வருகை தர முடியாது என்று கூறினேன்.நாங்கள் வரமாட்டோம் என்று தெரிந்து கொண்டு தான் இவ்வாறு செய்திருக்கின்றார் என்று சந்தேகம் தோன்றுவதாக அவர் கூறினார்.
சம்பந்நதன் இதில் கலந்து கொள்ள வேண்டிய அவசியிமில்லை.ஆகவே நான் இரு கட்சிகளது அனுமதி பெற்ற ஜனாதிபதியிடம் ஒரு கடிதத்தை எழுதினேன். கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. ஏன் இப்படி செய்கின்றீர்கள்.
நீங்களாக எங்களை அழைக்கவில்லை.ஆனால் சுமந்திரன் தான் எங்களை அழைத்தார்.இப்பொழுது எங்களால் வருகை தர முடியாத நிலையில் உள்ளோம். ஆகவே இதை ஒத்தி வையுங்கள்.சில விடயங்களை சமந்திரன் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
காரணம் எங்களுடைய கருத்து வேறு.அவருடைய கருத்து வேறு.இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்திற்கு உடனடியாக ஜனாதிபதியிடம் இருந்து பதில் வந்தது.இது உத்தியோகபூர்வமான சந்திப்பு அல்ல.
உத்தியோகபூர்வமான சந்திப்பிற்கு போதுமான அவகாசம் தந்து நாங்கள் அதை பற்றி பேசிக் கொள்வோம் என்று ஜனாதிபதியிடம் இருந்து பதில் வந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.