கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் தொடர் பனிமூட்டம் காரணமாக வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை அங்கு கடும் குளிர் காணப்படுவதுடன், இடையிடையே மழை பெய்தும் வருகிறது.
இதனால் போக்குவரத்து செய்வதில் சிரமங்கள் காணப்படுவதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, வங்களா விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடபகுதியில் பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது