கடந்த சில நாட்களாக நாட்டுக்கு தாக்கம் செலுத்திய தாழமுக்க வலயம் பலவீனமாகி தற்போது நாட்டை விட்டும் மேற்கு கரையோரமாக நகர்ந்து வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் மழையுடன் கூடிய காலநிலை குறைக்கும் சாத்தியம் காணப்படுவதாக அதன் பிரதிப் பணிப்பாளர் மெரல் மென்டிஸ் தெரிவித்தார்.
மத்திய மலைநாட்டின் நீரேந்து பிரதேசங்களிலும் தாழ்வார பிரதேசங்களிலும் மழைவீழ்ச்சி குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரையோரப் பிரதேசங்களிலும் காலநிலை சீராக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.