இலங்கை வரலாற்றில் இரண்டாவது தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒரு தமிழன் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண அரச அதிபராக கடமை புரிந்த திரு.மகேசன் அவர்கள் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னர் ஒரு தடவை ந. பத்மநாதன் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் திரு. மகேசன் அவர்களுக்கு மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.