கனடாவில் பல்லாயிரக் கணக்கான மக்கள் தொடர்ந்தும் இருளில் மூழ்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நத்தார் பண்டிகைக்கு முன்னதாக அமெரிக்கா மற்றும் கனடாவை தாக்கிய பனிப்புயல் காரணமாக இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டதுடன், மின்சார இணைப்புக்களுக்கும் துண்டிக்கப்பட்டுள்ளன.
கடுமையான பனிப்பொழிவு தொடர்ந்தும் காணப்படுவதனால் மின்சார இணைப்புக்களை மீள வழங்குவதில் சிரமங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோ மற்றும் கியூபெக் ஆகிய மாகாணங்களில் அதிகளவான வாடிக்கையாளர்கள் தொடர்ந்தும் மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பிரிட்டிஸ் கொலம்பியாவில் பனிப்பொழிவு காரணமாக வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.