கறுப்புச் சந்தை வர்த்தக நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் விசேட சட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
வாடிக்கையாளர்களை ஏமாற்றி கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களின் வியாபார அனுமதிப்பதிரத்தை ரத்து செய்யும் வகையில் புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெற்கு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளை தங்களுக்கு சாதகமான பயன்படுத்திக் கொண்டு நினைத்தவாறு பொருட்களின் விலைகளை உயர்த்தி வாடிக்கையாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
பொருட்களின் விலை உயர்வு
முட்டை, கோழி இறைச்சி, அரிசி, பால் மா, இனிப்பு பண்டங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நியாயமின்றி பொருட்களின் விலைகளை உயர்த்தும் வர்த்தகர்களை தண்டிக்கும் சட்டங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.