பெண் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் மஹவிலாச்சி ஹெலம்பகஸ்வெவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
காணி தொடர்பில் ஏற்பட்ட தகராறின் காரணமாகவே இச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
ஹலம்பகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலையுடன் தொடர்புடைய 52 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் நேற்று 31 ஆம் திகதி அநுராதபுரம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதனையடுத்து ஜனவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மஹவிலாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.