முகமாலைப் பகுதியில் இன்று அதிகாலை திருடர்களால் 2 பசு மாடுகள் களவாடப்பட்டுள்ளதாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கிளிநொச்சி – முகமாலைப் பகுதியில் திருடர்கள் இரண்டு விலை உயர்ந்த பசு மாடுகளை திருடி சென்றுள்ளனர்.
களவாடப்பட்ட மிக விலை உயர்ந்த பசுமாட்டில் ஒன்று கன்று ஈன்று ஒரு மாதங்கள் ஆகின்றனிலையிலேயே திருடப்பட்டுள்ளது.
தாய் பசு பலவாடப்பட்டுள்ளதால் கன்று அழுது புலம்பிய நிலையில் இருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.