சீனாவில் மீண்டும் தீவிரமடைந்து வரும் கொரோனா பரவல் காரணமாக சீன மக்களின் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையும் நிலைகுலைந்து போயுள்ளது.
இந்த நிலையில் அங்குள்ள மருத்துவமனைகளில் குவியல் குவியலாக சடலங்கள் குவிந்துள்ள காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன
சீனாவில் கொரோனாவால் நாளாந்தம் 9 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக தகவல் வெளியானது. இதனால் சீன சுகாதாரத்துறை கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை தகவல்கள் வெளியிடுவதை நிறுத்தி விட்டது.
அதேவேளை இந்தியா உட்பட ஆறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.