ஓமன் நாட்டுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்காகச் சென்ற 18 பெண்கள் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் கீழ் பாதுகாப்பு மையங்களில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத வேலைவாய்ப்பு
8 பெண்களைக் கொண்ட முதலாவது குழு 2022 டிசம்பர் 24 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் , 6 பெண்களைக் கொண்ட இரண்டாவது குழு இன்று நாட்டை வந்தடைவார்கள் என்றும் பணியகம் கூறுகின்றது.
அதேவேளை சுற்றுலா விசாவின் கீழ் சட்டவிரோதமாக ஓமன் நாட்டுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்காகச் சென்ற 18 பெண்கள் தற்போது தலைமறைவாக உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.