கட்டுவன – ஊருபொக்க வீதியில் ருக்மல்பிட்டிய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும்,மகனும் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் தந்தை மற்றும் மகன் சிகிச்சைக்காக கட்டுவன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தந்தை உயிரிழந்துள்ளார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மகன் மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் வெகண்டாவல பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய தந்தையும், 28 வயதுடைய மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் உயிரிழந்த மகன் டிக்வெல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியாவார்.
திருமண சுபகாரியங்களை வழங்கிவிட்டு மணமகள் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதேவேளை, மகனின் 28வது பிறந்தநாளும் அன்றைய தினம் என மேலும் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.