மிரிஹான பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சிக்கப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த குற்றச்சாட்டின் பேரில் சார்ஜன்டுடன் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு கடமைக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கியுடன் சந்தேகத்திற்குரிய கான்ஸ்டபிளுக்கு 30 தோட்டாக்கள் வழங்கப்பட்டன. அதில் ஒன்று காணவில்லை, எனவே அந்த தோட்டாவுக்கு என்ன ஆனது என்பதை அறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.