சுற்றுலா விசாவில் பெண்களை ஓமான் நாட்டுக்கு அனுப்பி வைத்து மனிதக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று உப முகவர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விஷேட புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட துணை முகவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக விசாரணைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
ஓமான் மனிதக் கடத்தலில் சிக்கிய பெண்கள்
குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வுக் குழுவொன்று ஓமான் சென்று மனிதக் கடத்தலில் சிக்கிய பெண்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்தக் குழுவைக் கைது செய்துள்ளனர்.
முல்லேரியா, சிலாபம், கந்தானை ஆகிய பகுதிகளில் வசிக்கும் இந்த உப முகவர்கள், பெண்களிடம் பணம் வசூலித்து சுற்றுலா விசாவில் மனிதக் கடத்தலில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.
கடந்த காலங்களில், இந்த மோசடியில் ஈடுபட்ட மூன்று துணை முகவர்களை இந்தப் பிரிவு கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.