நாட்டில் தற்போது ஒரு கிலோ மரவள்ளிக்கிழங்கு 200 ரூபாவுக்கும், ஒரு கிலோ வற்றாளை கிழங்கு 160 ரூபாவுக்கும், ஒரு கிலோ பலாக்காய் 200 ரூபாவுக்கும் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வால் நாட்டு மரக்கறிகளின் தேவை அதிகரித்துள்ள நிலையில், தேவைக்கு ஏற்ற வகையில் உற்பத்தி இல்லாததால் மரவள்ளிக்கிழங்கு, வற்றாளை கிழங்கு, சேனைக்கிழங்கு, பலாக்காய் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை மரவள்ளிக்கிழங்கு, வற்றாளை கிழங்கு மற்றும் பலாக்காய் போன்றவற்றின் விலைகள் இந்தளவுக்கு அதிகரிப்பது இதுவே முதல் முறை என ஹட்டன் பிரதேச நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.