ரொறன்ரோவில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் பெய்த மழை நீர் பனிப்படலமாக மாற்றமடைந்துள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதைகள் வழுக்கும் தன்மையுடையதாக காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேகம் குறைவாக வாகனத்தைச் செலுத்த வேண்டுமென பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
நேற்றைய தினம் இரவு ரொறன்ரோவின் வெப்பநிலை மறை 3 பாகை செல்சியஸ் எனவும், இன்றைய தினம் இரவு அது மறை 11 பாகை செல்சியஸ் அளவில் மேலும் வீழ்ச்சியடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சில பகுதிகளில் குளிர்கால காலநிலை சீர்கேடுகள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.