சென்னையில், திராவிட மாடல் பயிற்சிப் பாசறை- 2 மற்றும் திமுக இளைஞர் அணி செயலி தொடக்க விழா நடைபெற்றது. விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அந்த உரையில் அவர் பேசியதாவது:- இளைஞர் அணியின் செயல்பாட்டை ஒவ்வொரு நாளும் கவனித்து வருகிறேன்.
3 ஆண்டுகள் இளைஞரணி நிகழ்ச்சியில் தாம் பங்கேற்வில்லை என உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். மூன்றடை வருடம் இளைஞரணி நிகழ்ச்சிக்கு என்னை ஏன் கூப்பிடவில்லை என தெரியவில்லை. உதயநிதியின் தந்தையாக மகிழ்ச்சி அடைகிறேன். தலைவனாக பெருமைப்படுகிறேன்.
சமூக ஊடகங்களிலும் உதயநிதியை கண்காணித்து கொண்டிருக்கிறேன். பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி சிறப்பாக செயல்படுகிறார். திமுகவில் இருக்கக்கூடிய மற்ற அணிகளை விட இளைஞரணி முதல் அணியாக இருப்பது பாராட்டுக்குரியது. பாராளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்கு வெற்றியை தேடி தந்தார் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கல் பிரசாரம் மூலம் மக்கள் மனதில் பல விஷயங்களை பதிவு செய்தார்.
இளைஞர் அணி மூலம் அறிக்கை வெளியிட்டு நீர் நிலைகளை சுத்தம் செய்ய உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார். நீர் நிலைகளை சுத்தம் செய்யும் பணியையும் அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்தி திணிப்பு, நீட் தேர்வு பிரச்சினையில் இளைஞர் அணி பங்கேற்றதை எண்ணி மகிழ்கிறேன். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளும் கட்சி செய்ய வேண்டிய பணிகளை திமுக செய்தது. இவ்வாறு அவர் பேசினார்.