முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்காவிலுக்கும் – மாங்குளத்துக்கும் இடைப்பட்ட ஏ 9 வீதிப்பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் கரடி ஒன்று உயிரிழந்துள்ளது.
அறிவிப்பு பதாகைகள்
குறித்த பகுதியில் விலங்குகள் நடமாடுவதாக அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், இரவு நேரத்தில் வாகனங்களின் அதிவேகம் காரணமாக இந்த கரடி உயிரிழந்துள்ளதாகவும், கரடியின் மரணம் தொடர்பாக முல்லைத்தீவு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பது மக்களின் பொறுப்பு
குறிப்பாக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் வழியாக இரவில் வாகனம் செலுத்தும் போது விலங்கினங்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வாகனத்தினை செலுத்துமாறுவனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.