எடை இழப்புக்கான உணவு
உடல் பருமன் ஒரு நோயாக மாறி வருகிறது. உடல் பருமனால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிகை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் உடல் பருமனால் மக்கள் பல வித இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.
உடல் பருமன் பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. நீரிழிவு, இரத்த அழுத்தம், சிறுநீரக நோய் மற்றும் தைராய்டு போன்ற நோய்களுக்கு உடல் பருமன் காரணமாகும். உடல் பருமனை கட்டுப்படுத்த மக்கள் பல்வேறு வகையான முயற்சிகளை எடுக்கின்றனர்.
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உடல் பருமனால் பலர் அவதிப்படுகிறார்கள். மக்கள் உடல் பருமனை குறைக்க பல்வேறு வழிகளையும் பின்பற்றி வருகின்றனர்.
சிலர் கொழுப்பை குறைக்க வெந்நீர் குடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
வெந்நீர் குடிப்பது உடல் கொழுப்பை குறைப்பதோடு இன்னும் பல உடல் ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என்கிறார்கள் நிபுணர்கள்.
வெந்நீர் அருந்துவதற்கான சரியான முறை
ஆனால் வெந்நீர் அருந்துவதற்கான சரியான முறையை அறிந்து கொள்வது அவசியமகும்.வெதுவெதுப்பான நீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது உண்மை.இது உடலுக்கும் மிகவும் நன்மை பயக்கும். வெந்நீரைக் குடிப்பதன் மூலம் வயிற்றில் உள்ள கொழுப்பும் குறையத் தொடங்குகிறது.
ஆனால் வெந்நீர் குடிப்பதில் உள்ள மிகப்பெரிய கேள்வி என்னவென்றால் நாம் எப்படி வெந்நீரைக் குடிக்க வேண்டும் என்பதுதான்.
தேன் மற்றும் வெந்நீர்
தேன் மற்றும் வெந்நீர் உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் பி6, அமினோ அமிலங்கள், கார்போஹைட்ரேட், ரிபோஃப்ளேவின் மற்றும் நியாசின் ஆகியவை உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றன. இதன் காரணமாக, எடை வேகமாக குறைகிறது.
நச்சு நீக்கம்
தேனும், வெந்நீரும் சேர்ந்து நல்ல முறையில் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும். வழக்கமான வெந்நீரில் தேன் கலந்து குடிப்பதால் உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறும். இது கொழுப்பு கல்லீரல் பிரச்சனையையும் முடிவுக்குக் கொண்டுவருகிறது.
வளர்சிதை மாற்றம்
வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பதால், வளர்சிதை மாற்றம் பலப்படுகிறது. இதனால் உணவு எளிதில் ஜீரணமாகி வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமாகும்.