கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மருத்துவர்கள் அமைப்பொன்று தெரிவித்த கருத்து காரணமாக இவ்வாறு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரச மருத்துவ அதிகாரிகள் போரம் வெளியிட்ட ஊடக தகவல் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சுற்றிவளைக்கப்பட்ட அலுவலகம்
குறித்த அமைப்பின் தலைவரின் அலுவலகத்தை வைத்தியாசாலையின் சிற்றூழியர்கள் சுற்றிவளைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அரச மருத்துவ அதிகாரிகள் போரத்தின் தலைவர் ஊடகங்களிற்கான அறிக்கையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர் என குற்றம்சாட்டியிருந்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



















