யாழ்ப்பாணம் கோப்பாயில் குடும்பத்தலைவரை திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி உள்ளிட்ட 11 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (21) இரவு கோப்பாயில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் நடத்தும் 30 வயதுடைய அஜித் என்பவர் கொலைசெய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார், குடும்ப முரண்பாடே கொலைக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.
பல திடுக்கிடும் தகவல்கள்
இந்நிலையில் கொலைக்கான பின்னனி தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குடும்பமே சேர்ந்து கொலை கடந்த 21 ஆம் திகதி இரவு கோப்பாய் மத்தி பகுதியில் 30 வயதுடைய (ரவீந்திரன்) அஜித் என்பவர் ஒரு பிள்ளையின் தந்தை கொலை செய்யப்பட்டிருந்தார்.
கொலை சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த சம்பவம் வாள்வெட்டு குழுவினால் மேற்கொள்ளப்பட்டது இல்லை என்றும், முழு குடும்பமே திட்டமிட்டு மருமகனை கொலை செய்துள்ளமையும் வெளிச்சத்துக்கு வந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரவீந்திரம் அஜித் இவர் கோப்பாய் சந்தியில் மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையம் ஒன்றினை நடத்தி வருகின்றார். மாமனார் மற்றும் மைத்துனர்களுடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு இடையில் சீதனப் பிரச்சனை ஒன்று இடம் பெற்று வந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த அஜித் மனைவியின் தந்தையுடன் சண்டையிட்டு வந்ததையடுத்து மாமனார் மருமகனை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். தான் ஒரு மாதத்துக்குள் வீட்டை விட்டு வெளியேறுவதாக மருமகன் அஜித் கூறியுள்ளார்.
இதனையடுத்து 21 ஆம் திகதி இரவு மருமகன் வீட்டுக்கு சாப்பாடு எடுக்க வரும்பொழுது, தோட்டத்து வெளியில் வைத்து மருமகனை அடியாட்கள் மூலம் தாக்கியுள்ளார். அத்துடன் மோட்டார் சைக்கிளை அடித்துடைத்துள்ளனர் தான் யாரால் தாக்கப்பட்டது என அறிந்த அஜித் மோட்டார் #சைக்கிளை அவ்விடத்தில் விட்டு விட்டு மனைவியை கூப்பிட்டு கதறியவாறு நொண்டி நொண்டி வீட்டுக்கு சென்றுள்ளார்.
வீட்டுக்கு சென்றவர் அழுது புலம்பி எனக்கு அடித்தவர்கள் யார் என்று தெரியும் என கூறியுள்ளார். இந்நிலையில் மருமகன் எல்லோரையும் பொலீசில் பிடித்துக் கொடுத்துவிடுவான் என நினைத்த குடும்பம், கதவினை பூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கட்டையினால் தாக்கியுள்ளனர்.
நாடகமாடி பொலிஸுக்கு தகவல்
இளைய மச்சான் மண்வெட்டி பிடியால் அடித்துள்ளான் அத்துடன் தண்ணீர் இறைக்கும் மோட்டார் ஒன்றினால் தலையில் தூக்கி போட்டு குடும்பமாக சேர்ந்து கொலை செய்துள்ளனர். அத்துடன் தாங்களாகவே ஆம்புலன்ஸ்க்கு அறிவித்து வீட்டிற்கு வந்த # வாள்வெட்டு குழு ஒன்று வந்து தாக்குதல் நடத்தி மருமகனை வெட்டி விட்டு சென்றதாக பொலீசாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
மேலும் கொலை இடம் பெற்ற தடயங்களை தெரியாதவாறு அவர்கள் தாங்களாகவே வீட்டு கண்ணாடிகளையும் அடித்து உடைத்து சம்பவத்தினை திசை திருப்ப முற்பட்டுள்ளனர்.
அத்துடன் எங்களை வாள்வெட்டு குழு அச்சுறுத்தியதாகவும், நாங்கள் பக்கத்து வேலித் தகரத்தினைபிரித்துக் கொண்டு ஓடி தப்பி சென்றதகவும் அதை காட்டுவதற்காக பக்கத்து தகரத்னையும் தாங்களாகவே உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் புலன்விசாரணைகளை மேற்கொண்டு வீட்டில் இருந்து அனைத்து நபர்களையும் தனித்தனியாக விசாரித்த போது பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
உயிரிழந்தவரை திட்டம் போட்டு கொலை செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் பொலிஸ் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும் குடும்பஸ்தரை தாக்க பயன்படுத்திய மொட்டையான தடி, இரும்பு கம்பி, மண்வெட்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
வடமாகாண சிரேஷ்ர பிரதி பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின், ஆலோசனைகள் ஊடாக யாழ்ப்பாண உதவி பொலிஸ் அத்தியட்ச்சகர் மற்றும் சிரேஷ்ர பொலிஸ் அதிகாரி அவர்களின் நேரடி கண்காணிப்பில் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் யாழில் குடும்பமே திட்டமிட்டு ஒருவரை கொலை செய்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.