யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்றைய தினமே (26.01.2023) உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் சவரிமுத்து சகாயரூபன் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
விபத்துக்கு உள்ளாகியவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியின் வேம்படிச் சந்தியில் கடந்த 20ஆம் திகதி நடந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.