கம்பி வலையில் சிக்கிய நிலையில் சிறுத்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஹக்கல வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா பீட்றூ தோட்ட லவர்சிலிப் பிரிவில் நேற்று முன்தினம் (31) மாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
சம்பவம்
தேயிலை மலையில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி உயிரிழந்த குறித்த சிறுத்தை 4 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்த சிறுத்தையின் சடலத்தை ரந்தெனிகல கால்நடை வைத்தியப் பிரிவுக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.