சுவிட்சர்லாந்தில் லுசேர்ன் நகரில் பொலிஸார் போன்று சில நபர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் லுசேர்ன் பொலிஸார் மக்களை அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த திங்கட்கிழமை (30-01-2023) 15 சம்பவங்கள் தொடர்பில் லுசேர்ன் பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் லுசேர்ன் மற்றும் பிற மத்திய சுவிஸ் மாநிலங்களிலும் ‘போலி பொலிஸ் அதிகாரிகள்’ குறிப்பாக வயதானவர்களை தொலைபேசி அழைப்பு மூலம் ஏமாற்றி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
வயதானவர்களை தெரிவு செய்து தங்கள் கைவரிசையை காட்டும் போலி பொலிஸார் (Hochdeutsch) உயர் யேர்மன் மொழியில் பேசுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களின் குடும்ப உறுப்பினர் ஒருவர் விபத்தை ஏற்படுத்தியிருப்பாதாகவும் இவரை அதிலிருந்து விடுவிங்க சுமார் 40,000 – 80,000 CHF பிராங்குகள் கட்டவேண்டும் எனவும் கேட்டுள்ளார்கள்.
பலர் இது ஒரு போலி தொலைபேசி அழைப்பு என்பதை புரிந்து கொண்டு லுசேர்ன் பொலிஸாருக்கு தகவல் அளித்தாலும், ஒருவர் இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்டு பெருந்தொகை பணத்தை கொடுத்து இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் லுசேர்ன் பொலிஸார் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்கள்.
ஒரு நிஐமான பொலிஸ் அதிகாரி எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட ரீதியில் தொடர்பு கொண்டு பணம் வசூலிக்க முடியாது எனவும், அப்படியான தொலைபேசி அழைப்புகள் வந்தால் அல்லது அவ்வாறான அழைப்புகளில் உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் அழைப்பை துண்டித்து விட்டு உடனடியாக 117 க்கு அழைப்பை எடுக்கவும் எனவும் லுசேர்ன் கன்டோன் பொலிஸார் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்கள்.