பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது
இதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் புதிய விலையாக 400 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிப்பொருட்களின் விலைகளில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் தெரிவிக்கின்றது.