திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸின் பதவி விலகலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொள்ளாதபோதும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசு முயற்சிப்பதாகப் பல தரப்பும் குற்றம் சுமத்தி வருகின்றன.
சார்ள்ஸ் பதவிவிலகல்
இந்த நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.
எனினும், அவரது பதவி விலகலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றபோது உறுப்பினர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் அதில் கலந்துகொள்ளவில்லை. எனினும் ஏனைய 4 உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.