சுமார் 250,000 ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சுகாதார உதவியாளராக கடமையாற்றும் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு சந்தேகநபரை நேற்றையதினம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலன்னறுவை, கலிங்க கால்வாய் பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய பெண் தற்போது கட்டுநாயக்க, கோவின்ன பிரதேசத்தில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து கணவருடன் வசித்து வருவதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஹெரோயின் தனித்தனியாக சிறிய பொதிகளில் அடைக்கப்பட்டு அழகு சாதனப் பொருட்களுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.