தேசிய அடையாள அட்டையின் பாடசாலை விண்ணப்பங்களுக்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களின் செல்லுபடியாகும் காலம் மற்றும் அபராதம் விதிக்கும் காலம் ஆகியவை நீட்டிக்கப்பட்டுள்ளன.
பாடசாலைகளினால் விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய புகைப்படங்களின் செல்லுபடியாகும் காலம் மற்றும் அபராதம் வசூலிக்கும் காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனினும் பாடசாலைகளின் மற்றும் பிரிவேனாக்களின் அதிபர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களால் உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களுக்கு மட்டுமே இந்த நடைமுறை பொருத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.