லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை விபரம்
இதன்படி, 12.5 கிலோ கிராம் எடைகொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதன் புதிய விலை 5,280 ரூபாவாகும்.
மேலும், 5கிலோகிராம் எடைகொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 80 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதன் புதிய விலை 2,112 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2கிலோகிராம் எடைகொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 32 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலயாக 845 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.