நாட்டின் பல பகுதிகளிலும் வெங்காய அறுவடை ஆரம்பமாகியுள்ளதை அடுத்து சந்தைகளில் சின்ன வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஒரு கிலோ வெங்காயம் 800 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது.
அறுவடை செய்யப்பட்ட புதிய வெங்காயம் தற்போது சந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் சின்னவெங்காயத்தின் விலை அரைவாசியாக குறைவடைந்து 400 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.
அடுத்த வாரமளவில் மேலும் விலையில் வீழ்ச்சி ஏற்படலாம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த சில நாள்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் அறுவடைக்குத் தயாரான நிலையில் காணப்பட்ட வெங்காயப் பாத்திகள் வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.