முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நள்ளிரவு நாட்டை விட்டு வெளியேறியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மியன்மாருக்கு 10 நாள் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு சென்றுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மியன்மாரில் உள்ள பல சமூக ஆர்வலர் அமைப்புகளின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதியின் மனைவி அயோமா ராஜபக்ஷ, பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மியன்மாருக்கான இலங்கைத் தூதுவராக சட்டத்தரணி ஜே.எம். ஜனக பிரியந்த பண்டார செயற்படுகின்றார்.
இவர் முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் சகோதரராவார்.