ஜெர்மனியில் அகதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி நாட்டின் அகதிகள் தொடர்பான விடயம் ஐக்கிய நாடு சபையில் பேசப்பட்டுள்ளது. புருஸிலில் நடைபெற்ற ஐரோப்பிய ஓன்றிய நாடுகளுடைய அமைச்சர்களுடைய மாநாட்டின் பொழுது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன.
அதாவது இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து ஐரோப்பிய எல்லைகளுக்கு வரும் அகதிகளை தடுப்பது சம்பந்தமாகவும் ஏற்கனவே இந்த நாடுகளுக்கு வந்த அகதிகளுடைய அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு அவர்களை எவ்வாறு துரிதகதியில் நாட்டைவிட்டு வெளியேற்றுவது என்பது தொடர்பான பல கருத்து வேறுபாடுகள் உள்ளது.
அவ்வாறு இருந்தாலும் ஜெர்மனுடைய அதிபர் ஓலா ஷோஸ் அவருடைய கருத்தின் பிரகாரம் தாங்கள் திடகாத்திரமான ஒரு முடிவை இந்த மாநாட்டின் பொழுது எட்டியுள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.
அதாவது அகதி விண்ணப்பங்களை விசாரிக்கும் காலத்தை குறைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ்வாறு நிராகரிக்கப்பட்ட அகதிகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு ஏதுவான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.