பொது மக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் வகையில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு எவ்வாறு நிதியளிப்பது என்பது தொடர்பில் ஆராயுமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை அரசாங்கம் முன்வைத்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தேர்தலின் போதும் எதிர்கொள்ளாத பொருளாதார நெருக்கடி காரணமாக தேர்தலுக்கான நிதியை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம்
இந்த நிலையில், அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தின் ஊடாக தேர்தலை நடத்துவது தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இருப்பதாகவும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்