மிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான செல்லையா சதீஸ்குமார் விடுதலை செய்யப்பட்டார்.
சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான சதீஸ்குமார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டார்.
சதீஸ்குமார் உட்பட மூன்று தமிழ் அரசியல் கைதிகளுக்குக் கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி ஜனாதிபதியால் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டது.
அந்தவகையில், உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன் முறையீட்டு மனு அவரால் மீளப்பெறப்பட்டதை அடுத்து நேற்று அவர் விடுதலையானார்.
வவுனியாவில் வைத்து கைது
விவேகானந்தர் நகர் கிழக்கு, கிளிநொச்சியை வாழ்விடமாகக் கொண்டசதீஸ்குமார் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் நோயாளர் காவுவண்டியின் சாரதியாக கடமையாற்றியிருந்தார்.
2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பணி நிமிர்த்தம் கொழும்பு சென்ற இவரை வவுனியாவில் வைத்து பொலிஸார் கைது செய்திருந்தனர்.
புலிகளுக்கு உதவினார் என்று அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கில் கடந்த 2011ஆம் ஆண்டு அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.