இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன் பிரகாரம் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.
மின்சார சபையின் மறுசீரமைப்பு
வெளிநாட்டு அமைப்புகள் மற்றும் நாடுகளின் பிரதிநிதிகளை தனது அமைச்சில் அண்மையில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
மின்சார சபையை மறுசீரமைக்கும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பணிகள், சீர்திருத்த நடவடிக்கையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விடயங்கள் என்பன குறித்து இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மின்சார சபை மறுசீரமைப்புச் செயற்பாடுகளை முன்னெடுக்க தனியான அலுவலகம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.