பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் பண்ணாகம் பகுதியை சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிப்பு
பால் குடித்து சிறிது நேரத்தில் குழந்தை மயக்கமுற்று உள்ளதை அடுத்து பெற்றோர் குழந்தையை யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் .
வைத்தியசாலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் கண்டறியப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.



















