லண்டனில் வசிக்கும் தொழிலதிபர் வியாபாரத்தின் ஒருபகுதியை தனது தாய்நாட்டிலும் கட்டியெழுப்பும் நோக்கில் யாழ்.சண்டிலிப்பாயில் ஓர் உணவகத்தைத் திறந்தார்.
அவருக்கு இங்கே 10 வரையான உணவகங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
வழக்கமான உணவகம் போல் இல்லாது ஒரு சிவப்பு நிற பேருந்தை அமைத்து, அதையே உணவகம் ஆக்கியிருக்கிறார்.
இந்நிலையில் பார்ப்போரைக் கவர்ந்திழுக்கும் இந்தப் பேருந்து உணவகம் மெல்லமெல்ல பிரபலமாகி, இன்று அதிகளவு வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்கிறது.
தனியே பேருந்தை மட்டும் பார்ப்பதற்காக யாரும் உணவகத்துக்கு வரமாட்டார்கள் இல்லையா..? எனவே உணவின் சுவை, தரம் மற்றும் விலை போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள் இவர்கள்.