கம்பளை ஆதார வைத்தியசாலையில் தாதியர்கள் மற்றும் வைத்தியர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டமொன்றை இன்று முன்னெடுத்தனர்.
மின்சார கட்டணம் அதிகரிப்பு, வரி அதிகரிப்பு தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கம்பளை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் இருந்து கம்பளை நாவலப்பிட்டி பிரதான வீதிக்கு பேரணியாக வருகை தந்து வீதி அருகில் நின்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் பதாதைகளை ஏந்தியவாறும் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.