இன்றைய காலகட்டத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு பலருக்கு உள்ள பொதுவான பிரச்சனையாக உள்ளது.
அதிக கொலஸ்ட்ரால் நம் உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கிறது. இது உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, மூன்று நாள நோய் (ட்ரிப்பிள் வெசல் டிசீஸ்) மற்றும் கரோனரி தமனி நோய் (கரோனரி வெசல் டிசீஸ்) போன்ற ஆபத்தான நோய்களை ஏற்படுத்துகிறது.
கொலஸ்ட்ராலை குறைக்க பாகற்காய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவை எளிதாக குறைக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இது கசப்பான பச்சைக் காய்கறியாகும். இந்த காய் எவ்வளவு சிறப்பாக சமைக்கப்பட்டாலும் இதன் கசப்பை மறைக்க எத்தனை மசாலாப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டாலும் இதை சாப்பிடுவதற்கு முன்பு நாம் தயங்குகிறோம்.
மருந்துகளுக்கு சமமான மருத்துவ அம்சங்கள்
பாகற்காய் சாறு குடிப்பதால் பல வித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இது நமது உடலின் உட்புறத்தை சுத்தம் செய்கிறது. இதன் காரணமாக நாம் பல நோய்களிலிருந்து காப்பாற்றப்படுகிறோம்.
இது மிகவும் கசப்பாக இருப்பதால், அதை குடிப்பது அனைவருக்கும் எளிதானது அல்ல.
நீங்கள் இந்த கசப்புக்காயை வேறு வழியில் பயன்படுத்த விரும்பினால், அதை வைத்து ஒரு அற்புதமான மூலிகை தேநீர் தயார் செய்யலாம்.
இந்த பானம் மிகவும் பிரபலமாக இல்லை என்றாலும், அதன் நன்மைகள் மிகப்பெரியவை.
பாகற்காய் தேநீர் தயாரிப்பது எப்படி?
பாகற்காய் தேநீர் என்பது ஒரு மூலிகை பானமாகும். இது பாகற்காய் அல்லது உலர்ந்த பாகற்காய் துண்டுகளை தண்ணீரில் போட்டு தயார் செய்யப்படுகிறது.
இது ஒரு மருத்துவ தேநீராக விற்கப்படுகிறது. பாகற்காய் தேநீர் தூள் அல்லது சாறு வடிவில் கிடைக்கிறது.
இது Gohyah Tea என்றும் அழைக்கப்படுகிறது. இதை வீட்டில் எளிதாக தயாரிக்கலாம். பாகற்காய் சாறு போலல்லாமல் பாகக்காய் தேநீர் ஒரே நேரத்தில் அதன் இலைகள், பழங்கள் மற்றும் விதைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றது.
கொலஸ்ட்ரால் அளவு குறைவாக இருக்கும்
பாகக்காய் தேநீரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. இதன் உதவியுடன் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கலாம். இந்த மூலிகை தேநீரை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம்.