அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, நேற்றைய நிலவரப்படி அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் ரூ.357.68 ஆக குறைந்துள்ள அதேவேளை விற்பனை விலை ரூ.366.92 ஆக இருந்தது.
பெப்ரவரி நாணய மாற்று வீதம்
மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட மத்திய நாணய மாற்று வீதம் நேற்றைய நிலவரப்படி ரூபா 358.45 ஆக இருந்த அதேவேளை பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி ரூபா 362.66 ஆக உயர்ந்திருந்தது.
தரகர்கள் மற்றும் நிபுணர்களின் கூற்றுப்படி, சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றம் மற்றும் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றத்தின் அதிகரிப்பு காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரிப்பதன் மூலம் ரூபாயின் மதிப்பு உயர்வடைகிறதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை ரூபாவின் மதிப்பு மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.