வடகிழக்கு அமெரிக்காவில் உள்ள மாசச்சூசெட்ஸ் மற்றும் நியூயார்க்கின் சில பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் லெக்சிங்டன் மற்றும் கான்கார்ட் பகுதிகளில் சாலைகள், குடியிருப்புகள் முழுவதுமாக வெண்பனியால் சூழப்பட்டுள்ளன.
இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் மொத்தமாக 1.8 அங்குலம் பனிப்பொழிவு பதிவாகி இருக்கும் நிலையில், வடகிழக்கு பகுதிகளில் 8 அங்குலங்கள் அளவிற்கு பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என்றும் இந்த வாரம் முழுவதும் கடுமையான வானிலை நீட்டிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.