குஷ் ரக போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜைகள் நால்வர் ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹபராதுவ, ஹிட்டியனகல தல்பே மற்றும் பிடிதுவ பிரதேசங்களில் ஹபராதுவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 கிலோ போதைப்பொருள் மீட்பு
கைது செய்யப்பட்டவர்கள் 21 முதல் 46 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவித்த பொலிஸார், சந்தேக நபர்களிடமிருந்து 16 கிலோ 338 கிராம் குஷ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.
கைதான சந்தேகநபர்கள் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.